கடன் தவணைகளை வசூலிக்க இடைக்கால தடை விதிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணையை ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த தேவையில்லை என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி செயல்படுவதாக புகார் கூறியிருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Discussion about this post