சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்த விவரத்தை தற்போது பார்க்கலாம். அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில், 2 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 ஆயிரத்து 18 பேர் குணமடைந்துள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 363 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 3 ஆயிரத்து 702 பேர் குணமடைந்துள்ளதாகவும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து 212 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 5 ஆயிரத்து 534 பேர் குணமடைந்துள்ளதாகவும், கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெறுவதாகவும், 3 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளதாகவும், தண்டையார் பேட்டையில் ஆயிரத்து 770 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவிக நகரில் ஆயிரத்து 656 பேரும், அடையாறில் ஆயிரத்து 500 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 81 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post