தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசு ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவான விளக்கமளிக்க சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் துறை தேர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், மத்திய அரசு சார்பில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத், வரும் காலங்களில் நடைபெறும் தபால் துறைக்கான தேர்வுகளில் தமிழ்மொழி தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post