7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த 2014-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012-ல் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அரசு முடிவெடுத்த பின்பு ஏன் தாமதம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநருக்கு நினவுட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post