சேலம் செவ்வாப்பேட்டை மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த கடைகளை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, அகற்றும் பணி தொடங்கியது.
சேலம் – விருதாச்சலம் ரயில் பாதையில், சேலம் நகருக்குள், செவ்வாபேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பால பணி, கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துவதாக இருந்த நிலையில், அதன் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, இரண்டு ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 21 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், பொதுமக்களுக்கு தேவையான இந்த மேம்பாலத்தின் பணிகளை நிறுத்த முடியாது என்றும், ஒரு மாத காலத்திற்குள் கடைகளை காலி செய்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டிருந்தது.
அதன் பேரில், தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பாக, பொக்கலைன் இயந்திரங்கள் உதவியுடன், கடைகளை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Discussion about this post