சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு, அவரின் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி திறக்கப்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு உள்நோக்கத்தோடு கட்டப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றுதான் நினைவு வளைவு கட்டப்பட்டதாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர் தினேஷ் குமாரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Discussion about this post