தவறான பொய் பிரசாரங்களை நம்பி வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் என தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கம்பத்தில் தமது காரை வழிமறித்த ஒரு கும்பல், சிஏஏவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி தம்மை தாக்க முற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ள ரவீந்திரநாத் குமார், அந்த கும்பலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தேச விரோத சக்திகளின் பொய் பிரசாரங்களை நம்பி, இதுபோன்று திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.. அமைதியாக இருக்கும் தேனி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சில அமைப்புகள் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் சதிக்கு பலியாகி விட வேண்டாம் எனவும் போராட்டக்காரர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post