வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் – வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், இன்று மாலை தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என கூறினார். இதனால் நாளை முதல் 21-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் வரும் 20-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version