பெரியகுளம் பகுதியில் குறைந்த நீரில் குன்றாத விளைச்சல் தரும் நெல் பயிரிடும் முறையை தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி விவசாயிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம மற்றும் கெங்குவார்பட்டி பகுதிகளில் மஞ்சளாறு நதியின் மூலம் நீர்ப்பாசனத்தால் நெல், நிலக்கடலை போன்றவற்றை விவசாயம் செய்யப்படுகிறது. மழை பொய்த்தது, தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஒரு போக நெல் விவசாயம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கணேசன், அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் தென்கொரியாவை சேர்ந்த சங் ஜின் செளவிடம் தண்ணீர் சிக்கனத்தில் நிறைவான லாபம் தரும் நெல் சாகுபடி குறித்து அறிந்துகொண்டார்.
பல்வேறு நாடுகளில் இம்முறை விவசாயத்தை செயல்படுத்தி செலவில்லாத, குறைந்த தண்ணீர் சிக்கனத்தில் வெற்றி கண்டதால் தமிழகத்தில் முதன்முதலாக திருவண்ணமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் இந்த விவசாய முறையை அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து, இம்முறை விவசாயத்தை கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்னிலையில் சங் ஜின் செள செயல்முறை விளக்கம் அளித்தார்.
Discussion about this post