வடசென்னை பகுதிகளில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம், கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கொளத்தூர், திரு.வி.க நகர், பெரம்பூர், செம்பியம் ஆகிய பகுதிகளில் 8 வாட்ஸ் அப் குழுக்கள் மூலம், கேரளாவின் லாட்டரிக்கள் விற்பனை செய்வதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து தேடிய காவல்துறையினர், பெரம்பலூரைச் சேர்ந்த அருண்குமாரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ஒரு செல்போன் மற்றும் 48 ஆயிரத்து 550 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கேரளத்தில் இருந்த லாட்டரிகளை வாங்கி, அதிகவிலை வைத்து விற்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post