திம்பம் மலைப்பாதையில் நுழைவுக்கட்டணம் ரத்து: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நன்றி

திம்பம் மலைப் பாதையிலிருந்த சோதனை சாவடியில், நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு, லாரி உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடி வழியாக திம்பம் மலைப்பாதையில் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் சுங்கம் வசூக்கப்பட்டு வந்தது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக சரக்கு வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை ரத்து செய்யக்கோரி, வனத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு லார் உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை வைத்திருந்தது. இதனையேற்று, நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்யவும், 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் நுழைய அனுமதியும் அளித்தும் தமிழக அரசு கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள லாரி உரிமையாளர்கள் சமேளனம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதனிடையே, திம்பம் மலைப்பாதையில் நுழைவுக் கட்டணம் ரத்து மற்றும் இரவு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version