நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி உழியர்கள் ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 75 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவர காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என தெரிவித்ததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், வேலை நிறுத்தப்போரட்டம் தொடரும் என, விசைத்தறி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post