மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர் தொகுதியில் லோக ரங்கனும், மத்திய சென்னை தொகுதியில் கமீலாநாசரும், வடசென்னை தொகுதியில் ஏ.ஜி.மவுரியா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.
முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், மீதமுள்ள தொகுதி மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
Discussion about this post