மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்காக தனித்தனி செயலிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு செயலிகள் நடைமுறைக்கு வர இருக்கிறது. c VIGIL என்ற செயலி மூலம் தேர்தல் நடத்தை விதிகளை அறிந்து கொள்ள முடியும். விதிமீறல்களை படமோ, வீடியோவோ எடுத்து செயலியில் பதிவேற்றலாம். suvidha nomination செயலியில், வேட்பாளர்களின் சொத்து அறிக்கை உள்ளிட்ட விவரங்களை மக்கள் பார்க்க முடியும். வேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட suvidha என்ற செயலியின் மூலம் வேட்பு மனுவின் நிலை, வேட்பாளர் விவர அறிக்கை, பிரசாரத்துக்கான அனுமதி உத்தரவு, வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகள் வாரியான நிலவரம் மற்றும் இறுதி முடிவு ஆகியவற்றை பெற முடியும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காவும் தனி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Discussion about this post