மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் சரசாரியாக 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இத்துடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. ஏறத்தாழ 14 கோடி வாக்காளர்களை கொண்ட இந்தப் பகுதிகளில் இருந்து சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வருகின்ற 18 ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
Discussion about this post