மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மதுரை மக்களவைத் தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் மாலை 6 மணியுடன், அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. முன்னதாக, காலை 6 மணிக்கு, வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, வேலை செய்யாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டன. பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக, வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 6 மணிக்கு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
Discussion about this post