சிபிஐ விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மக்களவை மீண்டும் கூடியது. சிபிஐ விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிபிஐக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கடமையை செய்ய கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக விளக்கம் அளித்தார். மேலும், கொல்கத்தாவில் நடந்த துரதிருஷ்ட நிகழ்வு வரலாற்றில் எங்கும் நிகழாதது என கூறினார். இருப்பினும் தொடர் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.