தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் லோக் அதாலத் துவங்கியுள்ளது. இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும்வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாநில அளவிலான லோக் அதாலத் மற்றும் தேசிய அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா லோக் அதாலத் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று லோக் அதாலத் நடைபெறுகிறது. கிரிமினல் வழக்குகள், காசோலை மோசடி உள்ளிட்ட 11 வகையான 2 லட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 6 அமர்வுகள், மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் என நானூற்றி 68 அமர்வுகள் அமைத்து நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதாக மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் தலைவர் நீதிபதி நசீர் அகமது தெரிவித்துள்ளார்.
Discussion about this post