தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில், 502 அமர்வுகளில் 2 ,36 ,000வழக்குகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2019-ஆம் ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், லோக் அதாலத் நடத்த, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்தது.
அந்த வகையில், இன்று, தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெறுகிறது. நிலுவை மற்றும் சட்ட மையத்தில் தாக்கலான வழக்குகளை விசாரிக்க, லோக் அதாலத் விசாரணை இன்று நடைபெறுகிறது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பு வழக்குகள், வாரிசு உரிமை கேட்பு வழக்குகள், வங்கி வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் பதிவு செய்யாத வழக்குகள் என, மொத்தம் 2 ,36 ,000 வழக்குகளுக்கு, 502 அமர்வுகளின் மூலம் உடனடி தீர்வு காணப்படுகிறது.
Discussion about this post