ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் விடுமுறை அளித்து உத்தரவிடக் கோரி, மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு இன்று அல்லது நாளை அறிவுறுத்தும் என தெரிகிறது.
Discussion about this post