உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் திமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது…
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 27 மாவட்டங்களில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலை நிறுத்தும் நோக்கில் திமுக சார்பில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலைச் சந்திக்கத் திராணியில்லாமல், அதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்கிற உள்நோக்கத்தில் இந்த மனுவை திமுக தாக்கல் செய்துள்ளது.
Discussion about this post