ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக துணை கொறடா ரவியின் வாகனத்தை வழிமறித்து, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தோல்வி பயத்தால் பிரசாரம் செய்ய விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான வளர்புரம், கீழ்ப்பாக்கம், காவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிமுக வேட்பாளர்களை ஆதாரித்து துணை கொறடா ரவி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காவனூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, துணை கொறடா அரக்கோணம் ரவியின் வாகனத்தை வழிமறித்து திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் வில்சன் உள்பட திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
வில்சனின் மகள் ராதிகா, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால், அதிமுகவினர் இப்பகுதியில் வாக்குசேகரிக்க கூடாது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
ஆளும் கட்சி என்பதால், அதிமுக வேட்பாளர்கள் உள்பட சுயேட்சை வேட்பாளர்களையும் பிரசாரத்தில் ஈடுபடாமல் திமுகவினர் தடுப்பதாக குற்றச்சாட்டியுள்ள துணை கொறடா அரக்கோணம் ரவி,
தோல்வி பயத்தால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக சாடினார்.
Discussion about this post