பிரிகேஜி,எல்கேஜி குழந்தைகளுக்கு புதிய பாடத்திட்டம் !

பிரி கேஜி முதல் எல்கேஜி வரையிலான குழந்தைகளுக்கு புதிய பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளி முன்பருவ கல்வித் திட்டமானது, நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பிரி கேஜி, எல்கேஜி, மற்றும் யூகேஜிக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இதன்படி, காலை, 9.30 மணிக்கு வகுப்புகள் துவங்கும். பகல் 12.30 மணிக்கு மதிய உணவு நேரம் ஒதுக்கப்படும். பகல் 1.00 – 3.00 மணி வரை, ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., படிக்கும் குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் ஒரு மணி நேரம் வகுப்பு நடத்தி விட்டு மாலை, 4.00 மணிக்கு வகுப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மொழி வளர்ச்சி, சமூக உறவு மேம்பாடு, கலந்துரையாடல் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version