தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழகத்தை பொருத்த வரை அதிமுக தலைமையில் பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் ஆகியோரை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஸ் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post