உதகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு அபராதத்துடன் 38 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியை சேர்ந்த சேதுரகுபதி என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சேதுரகுபதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு மீதான விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சேதுரகுபதிக்கு 5 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறை தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Discussion about this post