இந்திய அளவில் மக்கள் பாதுகாப்பாகவும், இயல்பாகவும் வாழும் சூழல் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, மத்திய அரசு ஆண்டுதோறும் பட்டியிலிட்டு வருகிறது. அதன்படி, அனைத்து நகரங்களையும் ஆய்வு செய்து, இந்தாண்டுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக வாழும் பகுதியாக புனே நகரம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில், தமிழக நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. சென்னைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது. தலைநகர் டெல்லி 65 வது இடத்தை பிடித்துள்ளது. சுகாதாரம், பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Discussion about this post