கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீரபாண்டி கிராமத்திலுள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக “நமது நியூஸ் ஜெ தொலைகாட்சியில்” செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மச்சக்காந்தி, பெரியாயி, விஷ்ணுபிரியா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சாராய விற்பனை தொடர்பான செய்தியை வெளியிட்ட நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post