ஆளை கொல்லும் புலி, சிங்கம் உள்ளிட்ட அபாய விலங்குகளை கூட , நாய்குட்டி போல வாலையாட்டிக்கொண்டு வலம் வர வைக்கிறார் ஒரு அமெரிக்க இளைஞர். இவரது பெயர் Kody Antle.இவரை real-life Tarzan என அழைப்பதுண்டு.. சிறு வயது முதலே விலங்குகள் மீது அதீத அன்பு கொண்டு வளர்ந்தவர் Kody Antle.சிங்கம், புலி , கரடி, யானை , பாம்பு என எவற்றுடனும் நெருங்கிப்பழகி, சொல்வதை கேட்கும் செல்லப்பிள்ளைகள் போல அவற்றை மாற்றிவிடுகிறார் Kody Antle.
இவரது தந்தை Baghavan “Doc” Antle அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், 1983 ல் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.. அதன் பெயர் The Institute for Greatly Endangered and Rare Species என்ற T.I.G.E.R.S ஆகும். அதோடு உலகம் முழுக்க அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களை பாதுகாக்க தனி அமைப்பு ஒன்றை நடத்துகிறார்.ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இங்கே வந்து வன விலங்குகளை பார்த்து ரசிக்கிறார்கள்.
மருத்துவப்படிப்பை பயின்ற Kody Antle அத்தொழிலில் ஆர்வம் காட்டாமல், தன் தந்தையை போலவே, வன விலங்குகளின் மீது தீரா காதலை கொண்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான வன விலங்குகளுக்கு பயிற்சி அளித்துவரும் இவர், உலகம் முழுக்க பயணித்து புவியின் அரிய உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.திரைப்படங்கள், ஆவணப்படங்கள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி, அரிய உயிரினங்களை காக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் Kody Antle. உடலில் ஆடையின்றி, எவ்வித சாதனங்களும் கருவிகளும் இன்றி, ஆதிகால மனிதன் போல, விலங்குகளோடு விலங்குகளாக வாழத்தான் தமக்கு ஆசை என இவர் கூறுகிறார்.
Discussion about this post