தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பான அரசியல் கட்சி தலைவர்களிடையே சச்சரவுகள் இருக்கலாம், ஆனால் எண்ணற்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒரே மாதிரியாக உள்ளதால், தேர்தல் முடிவுகள் அதே மாதிரியாகதான் இருக்கும் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டின் கருத்துக் கணிப்புகளை ஒப்பிட்டு பார்த்தால், இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாக தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Discussion about this post