தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வெறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , மேற்கு வங்க கடல் பகுதிகளில் 35லிருந்து இருந்து 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post