லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் தலைநகர் திரிபோலியில் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபியின் இறப்புக்கு பிறகு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சிகர லிபிய ராணுவத்தின் தளபதி காலிபா ஹிப்தர், தனது படைகளை தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறும்படி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படையினர் திரிபோலியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சில தினங்களாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post