சென்னை கோயம்பேட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், ஆறுகள் மூலம் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், முதல் மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடுங்கையூரைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில், இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். இங்கு சுத்திகரிக்கபடும் கழிவு நீரானது, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுபயன்பாடு செய்யப்பட இருக்கிறது.
Discussion about this post