தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும்நிலையில், எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என சவுதி அரேபிய இளவரசர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து எல்லையில் நடத்தப்படும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இந்திய ராணுவத்தினர், பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்துவரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக 6 லட்சம் கோடி டாலர் நிதியை சவுதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எந்த நிலையிலும் துணை நிற்போம் என சவுதி இளவரசர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post