தாமதமாகும் மழைப்பொழிவு; அமேசானில் காட்டுத் தீ அணைவதற்கு வாய்ப்புகள் குறைவு

 

பிரேசிலில் மழைப்பொழிவுக்கான அறிகுறி பலவீனமாக இருப்பதால் அமேசான் காட்டுத் தீ அணைவதற்கான வாய்ப்புகள் குறைவு என வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல மழைக்காடான அமேசான் காட்டுத்தீயினால் பற்றி எரிந்து வருகிறது. காட்டுத் தீ பிரேசிலுடன் நிற்காது என்றும் அருகிலுள்ள பொலிவியா பராகுவே எல்லைப் பகுதியில் 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை தீ பரவும் என்றும் தெரிய வந்துள்ளது.

பிரேசில் அரசாங்கம் ஒரு தீயணைப்பு முயற்சியை தொடங்கியுள்ள நிலையில் தீயணைப்பு வாகனங்கள், விமானங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் பெரியளவில் நெருப்பினை அணைக்க மழையால் மட்டுமே முடியும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

அமேசானில் வழக்கமாக செப்டம்பர் பிற்பகுதியில் மழைக்காலம் தொடங்கி பரவலாக மழைபொழியத் தொடங்கும். இந்த நிலையில் சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிக்கைப்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி வரை மழைப்பொழிவு வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version