சேலம் அருகே, வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தை புகுந்து ஆடுகளை வேட்டையாடியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் தண்டா, தார்க்காடு, ஏழரைமத்திக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வனத்தை ஒட்டியுள்ளன. இந்நிலையில் அதிகாலை மேட்டூர் அடுத்த ஏழரைமத்திகாடு சேங்கிரெட்டி தோட்டத்தில் சுரேந்திரன் என்பவருடைய பட்டியில் புகுந்த சிறுத்தை ஒன்று ஆடு ஒன்றை கொன்று விட்டு மற்றொரு ஆட்டை வாயில் கவ்விச் சென்றது.
இதே போல் இரு தினங்களுக்கு முன்பாக கொளத்தூர் அடுத்த ஏழரை மத்திகாடு பகுதியில் பெரியசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் இரண்டு ஆடுகளை சிறுத்தை கொன்று எடுத்துச் சென்றது .இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post