சில படங்கள்தான் தலைமுறைகள் கடந்தும், தமிழ் ரசிகர்களின் மனதில் டெலீட் செய்ய முடியாத அந்தஸ்தை பெறும். அப்படியொரு ஹாலிவுட் படம்தான் டைட்டானிக். அழகு, ரொமாண்ட்டிக், பிரம்மாண்டம் என்பதையெல்லாம் தாண்டி ஜாக் டிகாப்ரியோவுக்கு ஸ்பெஷல் இடம் தந்தவன் தமிழ் ரசிகன். அந்த ஹாலிவுட் அசுரனுக்கு இன்று பிறந்தநாள்
பார்ன் வித் சில்வர் ஸ்பூன் இல்லை. அரிவாளும், கையடக்க துப்பாக்கிகளும்தான் லியோவின் குழந்தை காலம். பிறந்த இடமே ரவுடிகளின் கூடாரம். தெருவுக்கு தெரு விபச்சாரம். பள்ளிகளில் மாணவர்கள் என்ற பெயரில் இருந்த எல்லோருமே சைல்ட் அக்யூஸ்டுகள். நினைத்தால் வாழ்க்கையை தொலைக்க ஒரு சில நொடிகளே போதுமானதாக இருந்தது டிகாப்ரியோவுக்கு. ஆனால், அவரது ஆசை, எண்ணம் எல்லாமே கலையாக இருந்ததுதான் ஆச்சர்யம். “சயின்ஸ் வேணாம்மா.. மேக்கப் போட்டுக்கிறேன்” என்ற டிகாப்ரியோவுக்கு அவரது அம்மா அடிக்கவில்லை; அணைத்தார். அவரே ஆடிஷன்களுக்கு அழைத்துச் சென்றார். அம்மாவின் ஆசியை பெற்றறவன் தோற்க முடியுமா?
வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதில் கிடைக்காதுதான். டிகாப்ரியோவுக்கு எக்ஸ்ட்ரா கஷ்டத்தை தந்துதான் வெற்றி அணைத்தது.
டிகாப்ரியோவின் ஆஸ்தான நடிகர் ராபர்ட் டிநீரோ. அவரேதான் தி பாய்ஸ் லைஃப் படத்துக்காக லியோவை தேர்ந்தெடுத்தவர். அன்றிலிருந்தே லியோவின் அர்ப்பணிப்பு பயணம் தொடங்கியது. எந்த ரோலோ, எந்த படமோ.. அதில் டிகாப்ரியோவின் பங்களிப்பும், ஆர்வமும் 100%க்கு குறைந்தது கிடையாது.
1996-ம் ஆண்டில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ அவரை சாக்லேட் ஹீரோவாக, இளசுகளின் டார்லிங்காக மாற்றியது. `டைட்டானிக்’ அவர் மேல் பித்துப்பிடிக்கவைத்தது. `டைட்டானிக்’குக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றதும், ‘ஓட்டுக்களை ஒழுங்கா எண்ணுங்கடா’ என ஆஸ்கர் கமிட்டிக்கு இமெயில் அனுப்பி தெறிக்கவிட்டனர் அவரது ரசிகர்கள்.
2002-ம் ஆண்டில் `கேங்ஸ் ஆஃப் நியூயார்க்’, கொஞ்சம் வளர்ந்த வேறு ஒரு டிகாப்ரியோவை அறிமுகப்படுத்தியது.
2004-ம் ஆண்டில் வெளியான `ஏவியேட்டர்’ மெச்சூர்டு நடிகனாக நிலைநிறுத்தியது. வயது ஏற ஏற, சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே ‘ஜாங்கோ அன்செயின்ட்’ படத்தில் கொடூரமான கொலைகார ஸ்மைலிங் வில்லனாக நடிப்பதற்கு எல்லாம் தனி கெத்து வேண்டும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வயதிலும் அதற்கேயுரிய கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து மிரட்டியிருக்கிறார்.
6 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இறுதியில் 2016ம் ஆண்டு தான் தி ரெவ்னன்ட் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் கேப்ரியோ அசத்திவிடுவார் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் உள்ளது.
கேப்ரியோவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது பிரபல ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் ஓவியத்தை பார்த்தாராம். அப்போது வயிற்றில் இருந்த கேப்ரியோ முதல் முறையாக உதைத்தாராம். அதனால் தான் லியோனார்டோவின் பெயரை தனது மகனுக்கு சூட்டியுள்ளார்.
போராடி வெல்வது எப்படி என உலகிற்கு சொல்லிகொடுத்த அந்த ஹாலிவுட் அசுரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Discussion about this post