தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில், துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்கு பின் அரசுக்கு ஏற்படும் எதிர்பாராத செலவுகள், அவசர செலவுகளை ஈடுகட்ட துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், கொரோனா பாதிப்பால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட துணை மதிப்பீடுகள் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனாவுக்கு இதுவரை செலவு செய்த தொகை மற்றும் தொடர்ந்து செய்யப்படவேண்டிய தொகைக்கும் சேர்த்து நிதி ஒதுக்க பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post