ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்ததாரர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ, இபிஎப் ஆகிய தொகைகளை அரசுத் துறைகளே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதின்றத்தின் உத்தரவின்பேரில், தமிழக அரசின் முதன்மை செயலர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், தொழிலாளர்களுக்கு பணிப்பலன்களை அரசுத் துறைகள் நேரடியாகவே வழங்குவது, டீசலை பயன்படுத்தி தார் கலவை தயாரிப்பது போன்ற கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்க செயலர் கே.சி.சந்திர பிரகாஷ், ஒப்பந்ததாரர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Discussion about this post