வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 4 இடங்களில் அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அன்றைய தேதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துதுறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் வீடுகளில் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்நிலையில் வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், வாணியம்பாடி ஆகிய 4 பகுதிகளில் அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post