திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இயற்கை மூலக்கூறுகளை கொண்டு சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணியில் கடந்த 7 வருடங்களாக ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அவ்வாறு கரைக்கப்படும் சிலைகள் வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் போது, அது நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கின்றது. இதற்கு மாற்றாக இயற்கை மூலக்கூறுகள் கொண்டு பல்வேறு விதமான வடிவங்களில், விநாயகர் சிலைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கபடும் சிலைகள் உள்மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.