"எம்.ஜி.ஆர். சிலை சேதம்" – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம்

தஞ்சையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை, தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க திமுக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version