நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு அளிக்க இன்று கடைசி நாளாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து கடந்த 4-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 4-ம் தேதி விருப்ப மனு வினியோகத்தை அளித்து தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு பெறுவதில் அதிமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் மனுக்களை வாங்கிச்சென்றனர். 10-ம் தேதிவரை விருப்ப மனு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விருப்ப மனு பெற கடைசி நாளாகும். மாலை 5 மணி வரையே விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்பதால் அதிமுகவினர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கிச்செல்கின்றனர்.
Discussion about this post