கடந்த 4 மாதங்களில் 9 நாடுகளுக்கு பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பூடான், பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 7 நாடுகளுக்கும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 6 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 16 நாடுகளுக்கும் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் சீன அதிபர் ஜின்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட 14 தலைவர்கள் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post