சென்னை, மதுரவாயல் – தாம்பரம் செல்லும் மேம்பாலத்தில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்த வந்த ஜேசிபி இயந்திரம், அதிக கணம் காரணமாக உடைந்து விழுந்தது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Discussion about this post