நாகை மாவட்டம் கீழையூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை அபகரித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில், தங்க. கதிரவன் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். அதில், வாழக்கரை திமுக கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் உள்ள கலை செழியனுடன் சேர்ந்து எடிசன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிலம், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிலம் ஆகியவை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தாமஸ் ஆல்வா எடிசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.