திருச்சியில் பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய நபரான முருகன் பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை விசாரித்த நீதிபதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முருகனை பெங்களூரு சிறையில் இருந்து திருச்சிக்கு தமிழக காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
Discussion about this post