திருச்சியில் பிரபல நகைக் கடையில் நிகழ்ந்துள்ள கொள்ளை சம்பவம் தொடர்பாக 2வது நாளாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் சுவரில் துளைபோட்டு, 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை நேரத்தில் கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் நகைகளை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த துணிகர கொள்ளையில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
Discussion about this post