அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் திருநம்பிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிறப்பில் பெண்ணாக பிறந்த வைலே சிம்ப்சன், தன்னுடைய 21 வயதில் ஆணாக மாறியுள்ளார். மேலும், இவர் ஸ்டீபன் கேத் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வைலே சிம்ப்சன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமானார். மாதவிடாய் நின்ற போதிலும் அவர் கர்ப்பம் அடைந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. முகத்தில் தாடி மீசை என அவர் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post