குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழையால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகக் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், குற்றால அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து, அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையைக் காவல்துறையினர் நீக்கியுள்ளனர். இதனையடுத்துச் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
Discussion about this post