கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தென்காசியில் ஒருவரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 16 பேர் மீது திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, 11 பேரை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, என்ஐஏ-வின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் திருவிடைமருதூரில் முகாமிட்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மெற்கொண்டனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த ஷாலி என்ற மைதீன் அகமது ஷா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.